fbpx

Rain | மக்களே சூப்பர் குட் நியூஸ்..!! வெப்பத்தை தணித்து குளிர்விக்க வருகிறது மழை..!!

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்கள் கொஞ்சம் குளிந்து காணப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 05.04.2024 மற்றும் 06.04.2024ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

07.04.2024: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8ஆம் தேதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : பெண்களுக்கு ரூ.1 லட்சம்..!! 100 வேலைத்திட்ட ஊதியம் ரூ.400..!! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

Chella

Next Post

“விரைவில் சந்திப்போம்” - சிறையில் இருந்து தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதிய மணீஷ் சிசோடியா

Fri Apr 5 , 2024
திகார் சிறையில் இருந்து தனது சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவரை கடந்த பிப். 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் […]

You May Like