fbpx

இடி மின்னலுடன் பெய்ய காத்திருக்கும் மழை..!! எப்போது..? எங்கெங்கு..? வானிலை அப்டேட்..!!

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை (மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’சேலையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்தபோது சேட்டை செய்த கேமரா மேன்’..!! வாணி போஜன் கதறல்..!!

Fri Mar 31 , 2023
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது செங்களம் என்கிற வெப்தொடர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று வாணி போஜனுக்கு ஃபேன்ஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், தன்னைப்பற்றி யூடியூப்பில் பரவும் தவறான […]

You May Like