தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..”
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 10 செ.மீ மழையும், நீலகிரியில் 9 செ.மீ மழையும், தென்காசியில் 7 செ.மீ மழையும், தேனியில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..