fbpx

வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. குறிப்பாக தென்காசி, நாகை, சிவகங்கை, தஞ்சை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகி உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

“ நானும் டெல்டாகாரன் தான்.. தமிழ்நாட்டில் நிச்சயம் அது நடக்காது..” முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..

Wed Apr 5 , 2023
காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் […]

You May Like