fbpx

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் புதிய தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து வரும் 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும். இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் புதிய தகவல்..!!

அதேபோல், பிப்ரவரி 1, 2ஆம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

துணிவு vs வாரிசு….! வசூலில் முன்னிலை வகிப்பது எந்த திரைப்படம்….?

Sun Jan 29 , 2023
வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு உள்ளிட்ட இரு திரைப்படங்களும் இந்த வருடத்தின் முதல் திரைப்படங்களாக வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான தினங்களில் இருந்து துணிவு திரைப்படம் முன்னிலையில் இருந்தாலும், அதன் பிறகு வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு திரைப்படத்தை விட […]
அமெரிக்காவில் வெளியாகும் துணிவு..!! உரிமத்தை கைப்பற்றிய KGF-2, RRR, PS1 வினியோகஸ்தர்..!!

You May Like