fbpx

இடி, மின்னலுடன் மழை..!! மக்களே புதிய எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், “வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்றும் வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காலையில் வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் மணிலா பயிருக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி வினோஷா, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

Chella

Next Post

பிளஸ்1 மாணவியை கடத்திச் சென்று உல்லாசம்..!! ஆசைவார்த்தை கூறி திருமணம்..!! அதிரடியாக தூக்கிய போலீஸ்..!!

Fri Mar 24 , 2023
தருமபுரி மாவட்டம் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர், தருமபுரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் தேடி வந்தனர். கார்த்திக்கின் செல்போன் […]

You May Like