fbpx

செப்.19ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை..!! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் செப்.19ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்.19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

வீட்டு கடனை கட்டி முடித்த பின் உங்கள் கைக்கு எப்போது பத்திரம் கிடைக்கும்..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

Wed Sep 13 , 2023
பொதுவாகவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பத்திரத்தில் எப்போது ஆவணங்கள் கொடுக்கப்படும் என்ற விவரங்களை குறிப்பிட்டிருக்கும். அதை முழுமையாக மக்கள் படித்து அதன் பின்பு கையெழுத்திட வேண்டும். இதை பலரும் செய்ய மறப்பது இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. ஆனால், உண்மையில் இது தான் வீட்டு பத்திரங்களை பெறுவதற்கான முக்கிய கண்டிஷனாக உள்ளது. ரிசர்வ் வங்கி விதிகள் படி, வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் கடன் […]

You May Like