fbpx

”தமிழ்நாட்டில் மழை தொடரும்”..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களிலும், வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Chella

Next Post

முடிவுக்கு வந்தது சர்ச்சை!... ஹிஜாப் தடையை நீக்கி முதல்வர் அதிரடி!... ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்!

Sat Dec 23 , 2023
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். அந்த சமயத்தில் அதாவது கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள பியூ […]

You May Like