fbpx

மழைக்காலம்..!! களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்..!! பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை..!!

மழைக் காலத்தையொட்டி விஜய் மக்கள் இயத்தினர் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை பைகள் வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விழியகம், குருதியகம், படிப்பகம் போன்ற சேவைகளை விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை குழந்தைகள் படிப்பதற்கு நிதியுதவிகளை அந்தந்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

அதேபோல், குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் படிப்பதற்கு முட்டை, பால் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அந்தந்த மாவட்டத்தில் 5 இடங்களில், 2 முட்டை, ஒரு டம்ளர் பால், பிரட் பாக்கெட்டுகளை குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தவறாமல் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மழைக் காலத்தையொட்டி, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தி.நகர் அப்புனு தலைமையில், கண்ணம்மாபேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்பகுதி மக்கள் 100 பேருக்கு இலவசமாக தலா 3 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை பைகள் வீதம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

Chella

Next Post

மக்களே மறந்துறாதீங்க..!! இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

Fri Nov 17 , 2023
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று, அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா -கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி […]

You May Like