fbpx

உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் உலர் திராட்சை…!! இப்படி செய்து பாருங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும், சீராகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஒரு சில விஷயத்தின் காரணமாக உங்களுடைய உடலின் எடை சீக்கிரமாக அதிகரித்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த உலர் திராட்சை தண்ணீர். இது எப்படி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

உங்கள் உணவில் திராட்சை தண்ணீரைச் சேர்த்து, தினமும் அதை உட்கொள்வதால் நம்பமுடியாத பல நன்மைகளை பெறுவீர்கள். திராட்சை நீர் என்பது கிஷ்மிஷ் என்று அழைக்கப்படும் திராட்சையும் தண்ணீரும் ஒரே இரவில் ஊற வைக்கப்படுவதாகும். தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, திராட்சை சேர்த்து, இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலை அதை வடிக்கட்டவும். கை அளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் புரதச்சத்து, 21 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளது.

தேவையான பொருட்கள் :

உலர்ந்த திராட்சைகள்
எலுமிச்சை பழம்
இரண்டு கிளாஸ் தண்ணீர்

செய்முறை

* முதலில் இரண்டு கப் தண்ணீரில் 150 கிராம் உலர் திராட்சைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் இரவு முழுவதும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் வடிகட்டி எடுத்து சூடுப்படுத்தி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

* உங்களுக்கு சுவையாக வேண்டுமென்றால், எலுமிச்சை சாறும் கலந்துக் கொள்ளலாம். இதை குடித்த பிறகு அடுத்த 30 நிமிடங்களுக்கு எந்தவொரு உணவையும் சாப்பிடக் கூடாது.

* இதை தினசரி குடித்து வருவதன் மூலம் உங்கள் எடையை சீக்கிரமாக குறைத்துக்கொள்ள முடியும்.

Read More : சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா..? இது தெரிஞ்சா அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க..!!

Chella

Next Post

செல்வ செழிப்புடன் வாழ இந்த மரத்தை வழிபட்டாலே போதும்..!! அனைத்தும் உங்களை தேடி வரும்..!!

Wed May 8 , 2024
இந்து மதத்தில் மரம் மற்றும் செடிகளை வழிபடுவது வழக்கம். மரங்களையும் செடிகளையும் முறையாக வழிபடுபவர், எல்லா பிரச்சனைகளும் நீங்கி நல்ல அதிர்ஷ்டத்துடன் வாழ்வார். இது தவிர கிரக தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அந்தவகையில், இந்து மதத்தவர்கள் வழிப்படக் கூடிய மரத்தில் ஒன்று தான் கடம்ப மரம். இந்த மரமானது வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. அறிவு, கல்வி, புத்திசாலித்தனம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்திற்கு காரணமான கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. இந்த […]

You May Like