fbpx

ராஜராஜ சோழன் பிறந்தநாள்: அரசு விழாவாக அறிவித்தார் முதல்வர்…

ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்’’ மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் நவம்பர் 3ம் தேதி ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வரும் ஆண்டுகுளில் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் உள்ளது. இதனை மேம்படுத்து பொலிவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வருக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்த அவர் இதை ஏற்று நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ’’ மாமன்னர்  ராஜ ராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பா.ஜ.க. சார்பில் நன்றிகள் என அதில் குறிப்பிடப்பட்டது.

Next Post

மழையால் கிரிக்கெட் பாதிப்பு…இந்தியாவா? வங்கதேசமா?

Wed Nov 2 , 2022
டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச […]
ஒரே பந்தில் 286 ரன்கள்..! கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத சாதனை..! என்றும் நிகழ்த்த முடியாத சாதனை..!

You May Like