நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நெல்சனின் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்ததாக ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இதற்கான போட்டோஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பிறகு இந்த போட்டோஷுட்டில் ரஜினி கலந்து கொண்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், எந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.