fbpx

இமயமலையில் இருந்து இறங்கியதும் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களை சந்திக்கும் ரஜினி..!! இப்படி ஒரு பிளான் வச்சிருக்காரா..?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது படங்களின் ரிலீசுக்கு முன்னர், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணாத்த படத்தின் போது அவரால் இமயமலை செல்ல முடியவில்லை. இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றிருந்தார் ரஜினி. அங்கு ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார். இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார். தொடர்ந்து ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை ரஜினி மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இதையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் இன்று மாலை ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறார்.

Chella

Next Post

நிலவில் ஒரே இடத்தில் தரையிறங்குகிறதா சந்திரயான் 3, லுனா 25..? என்ன நடக்கப் போகிறது..? விஞ்ஞானிகள் சொன்ன தகவல்..!!

Sat Aug 19 , 2023
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்தது. பின்னர், புவியின் சுற்றுவட்டப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் – 3 நுழைந்தது. இதற்கிடையே, நேற்றைய முன்தினம் புரபல்சன் பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் விக்ரம் லேண்டர் […]

You May Like