சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”சாதி, மத, இன பாகுபாடு பார்க்கவில்லை என்றால், முதல்வர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். முதல்வரின் வாழ்த்தை அனைவரும் எதிர்பார்த்தோம். அவர்கள் வேறுபாடு பார்க்கிறார்கள். முதல்வர் தனது நம்பிக்கையை விட, பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்குமே உண்டு.
கட்சியில் புதிதாக இணைந்த விஜயதரணி 6 மாதமாகியும் பதவி வழங்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது இயல்பு தான். பாஜகவில் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கான அங்கீகாரத்தை பாஜக நிச்சயம் வழங்கும். விஜயதரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும். திமுக, அதிமுக குறித்து அண்ணாமலைக்கு கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. முடிவு எடுப்பதற்கும் உரிமை இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும். அதுதான் எங்களது ஒற்றைக் குறிக்கோள். வரும் செப்.25ஆம் தேதி வரை எங்களது முழு கவனமும் உறுப்பினர் சேர்க்கையில் தான் இருக்கப்போகிறது. மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை கிளப்பியுள்ளார். நான் சிறுவயதில் துரைமுருகன் வீட்டின் முன்பு மணலில் விளையாடி இருக்கிறேன். அவர் வீட்டின் முன்பு விளையாடிய நான், ஒரு கட்சியின் தலைவராகி, 2 மாநில ஆளுநராகி, தற்போது ஒரு கட்சியை பலப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.
மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சிக்காக உழைக்கும் திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும்” என்றார்.
Read More : நடிகர் பிஜிலி ரமேஷ் திடீர் மரணம்..!! என்ன ஆச்சு..? ரசிகர்கள் இரங்கல்..!!