fbpx

ஒரே மேடையில் ரஜினி, கமல்.. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் இசை வெளீயிட்டு விழா..

நாளை சென்னையில் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்து கொள்ள உள்ளனர்.

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கல் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது..

பொன்னியின் செல்வன் டீசர், பொன்னி நதி, சோழா, சோழா ஆகிய பாடல்களுக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விலா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம் “ இதை விட பிரம்மாண்டமாகவோ அல்லது சிறந்ததாகவோ இருக்க முடியாது! உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்களுடன் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

’கேப்டன் பதவியை விட்டு விலகியபோது’..! தோனி குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

Mon Sep 5 , 2022
“‘நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்” என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]
’கேப்டன் பதவியை விட்டு விலகியபோது’..! தோனி குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

You May Like