fbpx

ரஜினி சந்தித்தது இருக்கட்டும்… சத்தமே இல்லாமல் ஆளுநருக்கு எதிராக காய் நகர்த்தும் திமுக அரசு.. கவனிச்சீங்களா..

நடிகர் ரஜினிகாந்த் நேற்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது விவாதப் பொருளாகி உள்ளது. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. சுமார் 20 – 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு… தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு , ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் ஈர்த்துள்ளது.. தமிழ்நாட்டின் நலனுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் தயாராக உள்ளதாக ஆளுநர் என்னிடம் தெரிவித்தார்..” என்று கூறினார்.. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருத்து தெரிவிக்க ரஜினி மறுத்துவிட்டார்..

அரசியல் குறித்து ஆளுநரிடம் விவாதித்தாகவும், அதை தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.. மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதாக என்ற கேள்விக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று ரஜினி பதில் கூறினார்.. மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.. அதைப்பற்றி எல்லாம் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்..

ஆனால் நடிகர் ரஜினி ஆளுநரை சந்தித்த சில நிமிடங்களில் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.. வரும் 17-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். ஆனால் இது ஆளுநருக்கு எதிரான மிக முக்கிய நகர்வு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்..

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த மே மாதம் ஊட்டியில் 2 நாள் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினார்.. இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டாடாலும் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இதனால் இந்த மசோதா கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் நடக்க உள்ளது. தற்போது வரை ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர் என்றாலும், அவரை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினி கூறிய சற்று நேரத்திலேயே தே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் பதிலடியாக இது கருதப்படுகிறது.. ஆனால் ஆளுநர் இதை எப்படி கையாளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Maha

Next Post

முல்லைப் பெரியாறு அணை..! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் பதில் கடிதம்..!

Tue Aug 9 , 2022
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விதிகளின்படியே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கடந்த 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அதை குறிப்பிட்டு முக.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த […]

You May Like