fbpx

திடீரென சந்திரபாபு நாயுடுவை சந்திக்க மறுத்த ரஜினி..!! அவரே சொன்ன பரபரப்பு பதில்..!!

கோவை மாவட்டம் சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை சென்றடைந்தார்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் ரஜினியிடம் சிறையில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பார்க்க போகவில்லையா? என கேள்வி எழுப்பினர். இதற்கு, பதிலளித்த ரஜினி, அங்கு போவதாக இருந்தது. ஆனால் பேமிலி பங்க்‌ஷன் இருந்ததன் காரணமாக போக முடியவில்லை என கூறினார். தன் பேரனின் காதணி விழா காரணமாக சந்திரபாபுவை சிறையில் சந்திக்கும் முடிவை கைவிட்டுள்ளார் ரஜினி.

ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி கோரி சிறை அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் தற்போது பேரனின் காதணி விழாவுக்காக கோவை சென்றுவிட்டதால் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் முடிவை கைவிட்டுள்ளார் ரஜினி.

Chella

Next Post

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்..!! தங்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன்..!!

Sun Sep 17 , 2023
பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இவர், 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். […]

You May Like