fbpx

ஆளுநருடன் அரசியல் பேசிய ரஜினி..! ஆளுநர் மாளிகை என்ன அரசியல் அலுவலகமா? – சிபிஎம் கண்டனம்

ஆளுநர் உடனான சந்திப்பில், அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். அதில், “அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்திப்பது ஏற்புடையதே. அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

ஆளுநருடன் அரசியல் பேசிய ரஜினி..! ஆளுநர் மாளிகை என்ன அரசியல் அலுவலகமா? - சிபிஎம் கண்டனம்

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது? இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது.

ஆளுநருடன் அரசியல் பேசிய ரஜினி..! ஆளுநர் மாளிகை என்ன அரசியல் அலுவலகமா? - சிபிஎம் கண்டனம்

இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

’அனைத்து மாணவர்களுக்கும் இதை தெரிவிக்க வேண்டும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Tue Aug 9 , 2022
அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் […]

You May Like