fbpx

மீண்டும் பஸ் டிப்போவுக்கே சென்ற ரஜினி..!! திடீர் விசிட்..!! ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!!

ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலைக்கு சென்றுவிட்டார் ரஜினி. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சென்ற அவர், அங்குள்ள கோவில்களுக்கு சென்றபோது அம்மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, மீண்டும் சென்னை திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் அப்படத்தின் வெற்றியை கொண்டாடினார். இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், திடீரென பெங்களூருக்கு சென்ற ரஜினி, ஜெயா நகரில் உள்ள பிஎம்டிசி பஸ் டிப்போவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இந்த பஸ் டிப்போவில் தான் வேலை பார்த்துள்ளார். அதனால் அங்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Chella

Next Post

”மீண்டும் மீண்டும் அதை பற்றி பேசுவது கேவலம்”..!! விஜயலட்சுமியின் புகாருக்கு சீமான் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?

Tue Aug 29 , 2023
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக அப்போது கூறியதைத் […]

You May Like