இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சமூக வலைத்தளத்தில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு நடிகை அமலாப்பால் தான் காரணம் என திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான சேயர் பாலு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “தனுஷ் ஒரு அமைதியான மனிதர். ஆனால், அவருக்கு கொஞ்சம் குறும்பு குணம் உண்டு. திருமணத்திற்குப் பிறகு, அவர் வீட்டிற்குச் செல்லாமல் எப்போதும் அமலா பாலுடன் தங்கி வந்தார். இதன் காரணமாக, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன.
இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், வேறு வழியில்லாமல் அமலா பால் வீட்டிற்குச் சென்று அவரை எச்சரித்தார். தனுஷ் திருமணமானவர், குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பம் உள்ளவர். இது மீண்டும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால், எனது இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும் என்று ரஜினிகாந்த் அமலா பாலை எச்சரித்ததாகச் செயர்பாலு கூறினார். மேலும் உங்க மருமகனிடம் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாதுன்னு அமலாபால் தெரிவித்ததாக செயர்பாலு கூறினார்.