முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு பரோல் வழங்கியது.
இதையடுத்து மதுரை சிறையில் இருந்த ரவிச்சந்திரன் .. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புன் தூத்துக்குடியில் தாயார் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் பரோலை நீட்டிக் வேண்டம் என அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தார். இது 11வது முறையாக ரவிச்சந்திரன் பரோல் நீட்டிப்பில் வெளியில் உள்ளார். தற்போது அக்டோபர் 13-ம் தேதி வரை பரோலை நீட்டித்து சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.