fbpx

Raksha Bandhan | ரக்ஷா பந்தன்..!! பெண்களுக்கு ரூ.3,000..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! உண்மை தகவல் இதுதான்..!!

ரக்ஷா பந்தன் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு 3,000 ரூபாய் வழங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, இந்த பணத்தை எப்படி பெறுவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிவதற்கு அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு இணையதளமான PIB இந்த விஷயத்தை ஆராய்ந்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, நாடு முழுவதும் உள்ள சகோதரிகளுக்கும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரத்யகல் லாட்லி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும்,ச் அதில் மாதந்தோறும் 3,000 வரை பணம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பெண்களுக்கு 3,000 ரூபாய் கொடுப்பதாக இந்த செய்தி வெளியாகி வரும் நிலையில், அவை போலியான செய்தி என்றும், மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Chella

Next Post

"அடுத்த டார்கெட் சூரியன்"..!! "தயார் நிலையில் ஆதித்யா எல்-1"..!! மயில்சாமி அண்ணாதுரை கொடுத்த அப்டேட்..!!

Thu Aug 24 , 2023
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அடுத்த டார்கெட் சூரியனை நோக்கித்தான் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி சந்திரயான் – 3 புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை […]

You May Like