fbpx

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நான்கு மணி நேர பூஜைகளுடன் கோவில் கருவறையில் நிறுவப்பட்ட ராம் லாலா சிலை.!

உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

சிறப்புமிக்க வரலாற்று நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 7000 சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது. அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் என பன்முகத் திறமை கொண்ட பலருக்கும் இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஆன விராட் கோலி மகேந்திர சிங் டோனி சச்சின் டெண்டுல்கர் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தொழிலதிபர்கள் ஆன முகேஷ் அம்பானி கௌதம் அதானி ஆகியோரம் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் அடங்குவர்.

முற்றிலும் நகரா கலை வடிவமைப்பை பின்பற்றி கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் 380 அடி பரப்பளவைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் 392 தூண்கள் உடன் 44 வாசல்களுடன் கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் 121 அர்ச்சகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ராமஜென்ம பூமி ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் மோடி சிறப்பு விரதங்கள் கடைபிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் ராமர் கோவில் கருவறையில் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையான ராம் லாலா இன்று மாலை நிறுவப்பட்டது. நான்கு மணி நேரம் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளுக்கு பிறகு ராமர் கோவிலில் வெள்ளை பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்ட கருவறையில் 51 இன்ச் உயரத்துடன் கருப்பு கற்களால் செதுக்கப்பட்ட ஸ்ரீராமரின் 5 வயதுடைய சிலை கருவறையில் நிறுவப்பட்டதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.

Next Post

அதிர்ச்சி.! வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.! 'மாரடைப்பால்' மரணம் மருத்துவர்கள்.!

Thu Jan 18 , 2024
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பள்ளி ஒன்றில் பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் வகுப்பு நடைபெற்றுக் […]

You May Like