fbpx

ராமர் கோவில்: “1,000 வருடங்கள் நிலைத்திருக்கும் ராம் லாலா சிலை” பெங்களூர் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்.!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஆயிரக்கணக்கான விஐபிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது.

நேற்று ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம்நாலாவின் குழந்தை பருவ சிலையை கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஆதித்யா யோகி ராஜ் என்று சிற்பி வடிவமைத்திருந்தார். இந்த சிலையை பழமையான பாறையில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த சிலையை பற்றி மேலும் சில சிறப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ராமர் சிலை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத தன்மை கொண்டது என நேஷனல் ராக் மெக்கானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கூறியிருக்கும் அவர் 2.5 மில்லியன் வருட பழமையான பாறையில் இருந்து செய்யப்பட்ட ராம்நாலாவின் சிலை காலநிலை மாற்றங்கள் மற்றும் புற காரணங்களால் சேதம் அடையாத தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இது காலநிலை மாறுபாட்டையும் தாங்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். குறைந்தபட்ச பராமரிப்புடன் ஆயிரக்கணக்கான வருடங்கள் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

திருப்பதியை மிஞ்சும் அயோத்தி!… மொத்த உலகின் பார்வையும் இந்தியாவை நோக்கி!… ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்!

Tue Jan 23 , 2024
எதிர்காலத்தில் ஆண்டு தோறும் 5 கோடி சுற்றுலா பயணிகளை அயோத்தி ராமர் கோவில் ஈர்க்கும் என்றும் இது பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலகளாவிய தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் ப்ரோக்கரேஜ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெஃப்ரிஸ் ப்ரோக்கரேஜ் தரவுகளின்படி, நாட்டின் மத சுற்றுலா தளங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அயோத்தி மாறும் என்றும் ஆண்டுதோறும் 5 கோடி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like