fbpx

ராமர் கோயில் விழா புறக்கணிப்பு.! “இவர்கள் தான் சனாதன தர்மத்தின் எதிரிகள்” இந்திய கூட்டணியை கடுமையாக தாக்கிய பாஜக.!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழை நிராகரித்த இந்திய கூட்டணி தலைவர்களின் மீது பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்” வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறது. “இவர்களின் முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் நமது சனாதன தர்மத்தின் எதிரிகள்” என எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, அதிர் ரஞ்சன் சௌத்ரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரின் புகைப்படத்துடன், இவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் சனாதன தர்மத்தின் எதிரிகள், புனிதமிக்க ஸ்ரீ ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பை நிராகரித்தவர்கள் இவர்கள்தான் என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறது.

ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான சோனியா காந்தி மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. எனினும் அழைப்பிதழை பெற்றுக் கொண்ட அவர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்தனர். இது பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் விழா. மேலும் ராமர் கோவில் திறப்பு ஒரு அரசியல் நாடகம் என அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்களது நிராகரிப்பு மத்தியில் ஆளும் பாஜகாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறது . காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இதே காங்கிரஸ் கட்சி தான் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சாரம் செய்தது. ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்களை வைத்து நீதிமன்றத்தில் வாதாடியதும் காங்கிரஸ் கட்சிதான். ராமர் பாலத்தையும் அவர்கள் கேலி செய்தார்கள். அப்படிப்பட்ட ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் எவ்வாறு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள்.?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிராகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் புரி, தனது கண்டனத்தை ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்திருக்கிறார். இதில் பேசி இருக்கும் அவர் ” காங்கிரஸ் கட்சியை விட்டு தள்ளுங்கள். அவர்கள் பேசியதை ஒரு பொருட்டாக கூட மதிக்காதீர்கள். அவர்கள் பேசியதற்கான பலனை வருங்காலத்தில் அனுபவிப்பார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்ததை கடுமையாக கண்டித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ” இதற்காக காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதே காங்கிரஸ் கட்சி தான் ஸ்ரீராமரை கற்பனை என பிரச்சாரம் செய்தது. இப்போது ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் . இதற்கு நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்த தேசத்தின் மக்களால் காங்கிரஸ் கட்சி விரைவில் புறக்கணிக்கப்படும்” என தெரிவித்திருக்கிறார்.

Next Post

இந்த வருடத்தின் முதல் டி20 போட்டியில் வெற்றியை பதிவு செய்தது இந்தியா..!

Thu Jan 11 , 2024
2024ஆம் வருடத்திற்கான இந்திய அணியின் முதல் டி20 போட்டி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இன்று நடந்த முதல் டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் […]

You May Like