அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, அதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோயிலின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்பட்டுவிட்டது. கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சாலையோரங்களில் பணியாளர்கள் அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்தவகையில், ராமர் கோவிலின் உட்புறம் மற்றும் வெளியே மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிளிரும் விளக்குகளால் ராமர் கோவில் மணமகள் அலங்கரிக்கப்பட்டதை போல் காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் இந்த மலர்களின் அலங்காரம் மிகவும் மேம்பட்ட முறையில் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் தூண்கள் முதல் சுவர்கள் வரை பல்வேறு வடிவங்களில் மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட அலங்காரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.