டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி விமரிசையாக நடத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 26-ம் தேதி நாடு முழுதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குடியரசுத் தின விழாவையொட்டி, தலைநகர் டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் பெருமை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு கடமை பாதையில் இடம் பெறும்.இந்தாண்டு உத்திரபிரதேச மாநிலம் சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், பால ராமர் பிராண பிரதிஷ்டை தொடர்பான அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.