fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! தமிழக கோயில்களில் கடும் கட்டுப்பாடு விதிப்பு..?

நாட்டின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்பட்டது.

ஒட்டு மொத்த நாடே அயோத்தி விழாவை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் அறநிலையத்துறை இப்படி தடை விதித்திருப்பது பக்தர்களை மட்டுமின்றி கோவில் நிர்வாகிகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக இந்து அறநிலைத்துறை சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் நாளை பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sun Jan 21 , 2024
கூட்டுறவுத்துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியிடங்கள் : Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய படிப்புகளில் ஏதேனும் […]

You May Like