கர்நாடகாவை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான் சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ராமர் குடிகாரன் என்றும், தன் மனைவி சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவரை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் “ராம ராஜ்ஜியம் பற்றி பேசப்படுகிறது… வால்மீகியின் ராமாயணத்தின் உத்தர காண்டத்தைப் படித்தால், ராமர் சிறந்த அரசர் அல்ல என்பது தெளிவாகிறது, அவர் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை, ஆனால் 11 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார்.
ராமர் நண்பகலில் சீதையுடன் அமர்ந்து, அன்றைய தினம் முழுவதும் ஒயின் குடித்துக் கொண்டே இருப்பார்…அவன் தன் மனைவி சீதையைக் காட்டிற்கு அனுப்பி அவளைப் பற்றி கவலைப்படாமல்…ஒரு மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த சூத்திரனான சம்புகாவின் தலையை வெட்டினான்.. அவன் எப்படி சிறந்தவனாக இருக்க முடியும்?” என்று தெரிவித்தார்..
கே.எஸ்.பகவான் இதுபோன்ற சர்ச்சக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதன்முறையல்ல.. கடந்த காலங்களில் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதற்காக பேராசிரியர் சர்ச்சையில் சிக்கியவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்து மதத்தை அவமதித்ததாக பெங்களூரு பெண் ஒருவர் பகவான் மீது மை வீசினார்.
கடந்த ஆண்டு ஜனவரியில், ராமர் கோயில் குறித்த அவரது சர்ச்சைக்குரிய புத்தகம் கர்நாடக புத்தக தேர்வுக் குழுவால் கைவிடப்பட்டது. ராமரை மோசமான வெளிச்சத்தில் சித்தரித்ததற்காக அவருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..