fbpx

பென்சிலின் நுனியில் ராமர் சிலை!… உலகின் மிகச்சிறிய சிலை இதுதான்!

கின்னஸ் சாதனை படைத்த ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி நவரத்தின பிரஜாபதி கலைஞர், பென்சிலின் நுனியில் ராமர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அனைத்து சாஸ்திர நெறிமுறைகளையும் பின்பற்றி, பிற்பகல் அபிஜீத் முஹூர்த்தத்தில் கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்படும். கடந்த 16ம் தேதிமுதல் தற்போதுவரை கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்கள் விடுமுறையும் அளித்துள்ளன. மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பரிசுப்பொருட்களும், நன்கொடைகளும் ராமர் கோவிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காகவும் சிறப்பு பரிசுப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்திக்கு உலகின் விலையுயர்ந்த வால்மீகி எழுதிய ராமாயண புத்தகம் கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகயில் கின்னஸ் சாதனை படைத்த ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி நவரத்தின பிரஜாபதி கலைஞர், பென்சிலின் நுனியில் ராமர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்து சிற்பி கூறியதாவது, இந்த சிற்பத்தை உருவாக்க 5 நாட்கள் ஆனதாக கூறினார். அதன் உயரம் 1.3 செ.மீ. உலகிலேயே மிகச்சிறிய சிலை இதுதான். விழா முடிந்ததும் ராமர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக கோயில் அறக்கட்டளைக்கு இந்த தனித்துவமான கலைப்பொருளை பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்.

Kokila

Next Post

பழிவாங்க துடிக்கும் பாம்பு!… இறந்தபின்பும் ஒருமணிநேரம் உயிருடன் இருக்கும் தலை!… அறிவியல் உண்மை!

Sun Jan 21 , 2024
உயிர்களைக் கொல்வது எந்த வகையிலும் சரியல்ல. ஆனால் பல சமயங்களில் கோபத்தினாலோ அல்லது பயத்தினாலோ மக்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக பாம்புகளுக்கு இது நடக்கும். கிராமத்தில் யாருடைய வீட்டிற்குள் பாம்பு வந்தால், அது யாரையாவது கடித்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். பல சமயங்களில், பாம்பு யாரையாவது கடித்ததால், மக்கள் கோபமடைந்து பாம்பைக் கொன்று விடுகிறார்கள். சரி, பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை ஏன் […]

You May Like