fbpx

Ramar |அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்காமல் ராமர் கோயில் திறப்பு விழா வீடியோ..!! ஆந்திராவில் ஷாக்..!!

ஆந்திராவில் அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை பார்க்க வைத்து அறுவை சிகிச்சை முடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Ramar | ஆந்திர மாநிலம் குண்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நோயாளிக்கு வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக வீடியோவை ஆபரேஷன் தியேட்டரில் போட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், ”மணிகண்டன் ராமர் மீது அதிகமான பக்தி வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை போட்டு காண்பித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மணிகண்டனும் ராமர் கோவில் திறப்பு விழாவை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டே அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இடையிடையே அவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மயக்க மருந்து இல்லாமல் ராமர் கோவில் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போதே நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது ஒரு பக்கம் ஆதரவையும் மற்றொரு பக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More : https://1newsnation.com/local-holiday-today-is-a-holiday-for-schools-in-this-district-students-are-happy/

Chella

Next Post

District Collector warning: பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை!… தொழிலாளர்கள் பயிற்சி கட்டாயம்!… மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Tue Feb 20 , 2024
District Collector warning:பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிர்ணயித்த காலத்துக்குள் பயிற்சியை முடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும். பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு […]

You May Like