சீமான் – ரஜினிகாந்த் ஆகிய இருவரின் சந்திப்பு பற்றி படுமோசமாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், ”சீமான் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குக் கூட வர முடியவில்லை. இவர் ஆட்சியைப் பிடிப்பாரா? மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். சீமானே பெரிய சங்கி. அவர் போய் ரஜினி என்ற சிங்கியைச் சந்தித்துள்ளார்.
சீமான் ஏற்கனவே பாஜக கைக்கூலிதான். ஆகவே, போய் ரஜினியைச் சந்திக்கிறார். இதில் என்ன பெரிய செய்தி இருக்கப் போகிறது? ரஜினி சினிமா சூப்பர் ஸ்டாராம்? சீமான் அரசியல் சூப்பர் ஸ்டாராம்? சீமான் இதுவரை ஒரு தொகுதியில் எங்காவது ஜெயித்துள்ளாரா..? தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் ஒருவர் ஜெயித்தார் தெரியுமா..? அவர் பெயர் கருப்பையா மூப்பனார்.
அந்தக் கட்சி பெயர் தமிழ் மாநில காங்கிரஸ். அக்கட்சிக்கு இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா..? 38 தொகுதிகளில் வென்ற கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டது? சீமான் 8% வாக்குகள் வாங்கிவிட்டால் பெரிய கட்சியாகிவிட முடியுமா? சீமானுக்கு தலைவராகும் தகுதி இருக்கிறதா..? காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டேன். அதை ஒழிப்பதுதான் கொள்கை என்கிறார் சீமான். காங்கிரஸ் சீமானிடம் கூட்டணி வைக்க விண்ணப்பம் போட்டதா? வேறு மாநிலத்திற்குப் போய் பிரியங்கா காந்தி தேர்தலில் நின்று 4.5 லட்சம் வாக்கு வாங்கி வெற்றி பெற்றுவருகிறார். அந்தக் கட்சியும் சீமான் கட்சியும் ஒன்றா..?
தம்பி விஜய் கூப்பிடுவார் என்று சீமான் காத்துக் கொண்டிருந்தார். கடைசியில் அவர் கூப்பிடாததால், விஜய்யை எதிர்க்கிறார். சீமானால் யாருக்கும் லாபம் கிடையாது. சொல்லப் போனால் விஜயலட்சுமிக்கே ஒரு லாபமும் இல்லையே? விஜய்க்கு எப்படி லாபம் இருக்கும்? தனித்து நிற்பேன் எனக்கூறும் சீமானின் கட்சி 2026இல் தமிழ்நாட்டிலேயே இருக்காது” என்று பேசியுள்ளார்.
அதேபோல் ராமதாஸ் மற்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இடையே நீடிக்கும் மோதல் போக்கு பற்றிப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “காலாவதியாகப் போகும் கட்சியின் தலைவர் ராமதாஸ். அவரிடம் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.
Read More : இன்று இந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்..!! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!