fbpx

பத்து ஆண்டுகளாகியும் அமைச்சரின் சகோதரர் கொலையில்..ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை… கொலையாளிகள் பிடிபடுவார்களா? ..

திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் குறித்த வழக்கில்இதுவரை ஒரு சிறு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை.

திமுகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு ஒரு நாள் நடைபயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றனர். இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றது.

அதிமுக ஆட்சியின் போது இந்த கொலை நடந்தது. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை. எனினும் திமுக ஆட்சியிலாவது குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் நடந்த நாள்முதல் திருச்சி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ராமஜெயத்தின் மனைவி லதா நீதிமன்றத்தை நாடி சி.பி.சி.ஐ.டி. , சி.பி.ஐ. என தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த முயற்சியும் தோல்வியை எட்டியது. இதில் தெளிவானதகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கை போலீசாரே விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் விசாரணையை தொடங்கினார்கள். இந்நிலையில் இதுவரை பெரிய அளவில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் துப்பு கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 2 பேரை இந்த வழக்கில் இறுதிக்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை விசாரித்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ. பாலன் என்பவர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்களாவார். எனவே இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதால் பரபரப்பாக்கியுள்ளது.

Next Post

’சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா’? ஈஷா வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி..!!

Tue Sep 27 , 2022
கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது? என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா சார்பில் சென்னை […]
’சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா’? ஈஷா வழக்கில் மத்திய அரசுக்கு கேள்வி..!!

You May Like