ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 ஓபிஎஸ்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 4 பேர் போட்டியில் குதித்துள்ளது ஓபிஎஸ் டீமை பீதியடைய வைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என 4 ஒ.பன்னீர்செல்வங்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரிலும் ஒருவர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார்.
நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இதில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிய சூடு ஆறுவதற்குள், அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஓபிஎஸ் என்ற பெயரில் மனுதாக்கல் செய்த 4 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இப்போது 5 ஓபிஎஸ்கள் களத்தில் உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் நிற்கவுள்ளார். இந்த சூழலில் இன்னும் 4 ஒ.பன்னீர்செல்வங்களும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். எழுத்து வரிசைப்படி இந்த 5 பேரின் பெயர்களும் அருகருகே இடம்பிடித்தால், தங்களுக்கான வாக்குகள் பிரியும் என்று அஞ்சுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இப்போது 5 ஓபிஎஸ் உட்பட 6 பன்னீர்செல்வங்கள் களத்தில் இறங்கியுள்ளது ராமநாதபுரத்தை கிறுகிறுக்க வைத்துள்ளது.
Read More : Udhayanidhi Stalin | ’தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் உரிமைத்தொகை’..!! உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!