fbpx

Ramanathapuram | தற்போதைய எம்பி நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளர்..!! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு..!!

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் காதர் மொய்தீன் பேட்டி அளித்தர்.

அதில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விவரித்த அவர், “ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார்” என்று அறிவித்தார். எனினும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடலாம் என சொல்லப்பட்ட நிலையில், இந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக காதர் மொய்தீன் தெரிவித்தார்.

Read More : ADMK | கடைசி நேரத்தில் அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்..!! அதிர்ச்சியில் பிரேமலதா..!!

Chella

Next Post

Bomb Blast | பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி..!! சென்னை ஹோட்டல்களில் அதிரடி சோதனை..!! பெரும் பரபரப்பு..!!

Sat Mar 2 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் அமைந்து இருக்கிறது ராமேஸ்வரம் கபே உணவகம். பல்வேறு இடங்களில் கிளை பரப்பி இருக்கும் இந்த உணவகம், எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும். வழக்கம்போல் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், […]

You May Like