fbpx

விஜய் டி.வியை மோசமாக பேசிய ராமர்… ஒதுக்கப்படுகின்றாரா ராமர்?..

விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து பிரபலமானார். இதைத் தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட ஷோக்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நிறைய ஷோக்களில் விஜய் டிவி பற்றியும் , சம்பளம் குறித்து அவர் கலாய்த்து வந்தார். விஜய் டிவியைப் பற்றி மோசமாகவும் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஜு வூட்ல பார்ட்டி என்ற ஷோவில் கலந்து கொண்ட ராமர் நடிகை தான்யாவிடம் நகைச்சுவையாக கூறும்போது , ’’ விஜய்டிவிக்கு வந்தால் பென்சன் வாங்கும் வரை எந்த டென்சனும் இல்லாமல் இருக்கலாம்’’ என கலாய்த்து பேசியிருந்தார்.

https://twitter.com/FilmFoodTravel/status/1574268556203921408?s=20&t=kdmj4JdrYWws_t2h5EmCDw

இந்த ஷோ வெளியானதில் இருந்து இவர் ஒதுக்கப்படுகின்றாரோ என்ற வகையில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Post

சொந்த தொகுதிக்கே செல்ல முடியாமல் தவிக்கும் ஆ.ராசா..!! கடும் எதிர்ப்பால் நீலகிரி பயணம் திடீர் ரத்து..!

Tue Sep 27 , 2022
எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி சுற்றுப்பயணம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமையும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காதது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர் எம்பியாக இருக்கும் நீலகிரி […]
ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

You May Like