fbpx

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..!! வழக்கை NIA-விடம் ஒப்படைத்தது மத்திய அரசு..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் முழுக்க என்ஐஏ அதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளது. முன்னதாக வெடிவிபத்து குறித்துப் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, “நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 8 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

பல சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். இந்த தருணத்தில் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். மங்களூரு குண்டுவெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? என்பது எங்களுக்குத் தெரியாது. பாஜக எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : ’லஞ்சம் வாங்குவது MP, MLA-க்களின் உரிமை இல்லை’..!! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து..!!

Chella

Next Post

Seeman | கரும்பு விவசாயி சின்னம் கேட்ட நாம் தமிழர்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் சீமான்..!!

Mon Mar 4 , 2024
கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு […]

You May Like