fbpx

ராம்ஜான் பண்டிகை..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!! மாணவர்கள் ஷாக்..!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 4 முதல் 9ஆம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் அரசு செய்துள்ள மாற்றங்களை பார்ப்போம்.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்டது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்ளுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டது. அதன்படியே அட்டவணையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு. பள்ளிக்கல்வித்துறை ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையினை மாற்றி அமைத்துள்ளது. வருகிற 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில், வெளியான அட்டவணை ஏப்ரல் 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் முடிந்த பின்னர் தான் இரண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றி அமைக்க எம்.எல்.ஏ.க்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22-ஆம் தேதிக்கும், 12இல் நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ஆம் தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Daniel Balaji | மறைந்த பிறகும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய டேனியல் பாலாஜி..!!

Chella

Next Post

’பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் மோடியிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்’..!! விளாசிய கமல்..!!

Sat Mar 30 , 2024
ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன் இருக்கப் போகிறது. நாம் கொடுக்கிற வரியில், ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. ஆனால், இங்க நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ராங்களே அவர்களுடைய ஊரில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் […]

You May Like