fbpx

“நீ அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டவள் தானே.. நீ என்ன கண்ணகியா??” நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட பயில்வான் ரங்கநாதன்..

சுமார் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஏனெனில் இந்த திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இருவரின் திருமண வீடியோவை Nayanthara : Beyond the Fairy Tale என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் உருவாக்கியது. நயன்தாராவின் திருமணத்தை படமாக்கும் உரிமையை ரூ.25 கோடி செலவழித்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறார் நயன்தாரா. தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு தரப்பு நயன்தாரா மீது தான் தவறு என்று கூறி வருகிறது. ஒரு பக்கம் இரு தரப்பும் மாறி மாறி கூறை சொல்லிக்கொண்டிருக்க, நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று Nayanthara: Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் ரிலீஸாகிவிட்டது. இந்நிலையில், வழக்கம் போல் பயில்வான் ரங்கநாதன் எனது கருத்தை பதிவு செய்கிறேன் என்று கூறி தனியார் யூட்யூப் சேனளுக்கு பேட்டியை கொடுத்து விட்டார்.

அந்த வகையில் அவர் கூறியிருப்பதாவது, “நயன்தாரா எட்டுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். எப்போதும் அவர் பணம் தான் முக்கியம் என்ற நினைப்பில் இருக்கக்கூடியவர். இதனால் தான் அவர் தனது திருமணத்துக்கு, பத்திரிகையாளர்கள், மீடியாக்காரர்கள் யாரையும் அழைக்காமல், திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்று பணம் பார்க்க நினைத்துள்ளார். அப்படி தான், தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளார். ஏன் தனுஷ் பழிக்கு பழி வாங்குகிறார் என்று நயன் சொல்ல வேண்டும்?. சரி, சாபம் விடுகிறீர்களே அதுக்கு நீங்கள் என்ன கண்ணகியா?.. முதலில், சிம்புவுடனான காதல் முறிந்தது.

பிறகு, பிரபுதேவாவை காதலித்தீர்கள். நீங்கள் இன்னொருவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர்தானே. ஒன்று என்னுடன் இரு இல்லையென்றால் மனைவி, பிள்ளையுடன் இரு என்று பிரபுதேவாவை நீங்கள் சொன்னீர்கள். அவர் தனக்கு பிள்ளைகள் முக்கியம் என்று சென்று விட்டார். பிரபுதேவாவின் மனைவி உங்கள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு போகவில்லையா? என்று தனது மனதில் இருந்ததை எல்லாம் அவர் புட்டு வைத்துள்ளார்.

Read more: “தனுஷ் தான் அதுக்கு காரணம்..” ஆவணப்பட சர்ச்சைக்கு மத்தியில் விக்னேஷ் சிவனின் பழைய பேட்டி வைரல்..!

English Summary

ranganaathan-opens-up-about-nayanthara-and-her-relationships

Next Post

டாப் அப் ஹோம் லோன் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..? இதன் சிறப்பம்சங்கள் இதோ..

Mon Nov 18 , 2024
What is top-up home loan? All you need to know about smart alternative for extra funds

You May Like