fbpx

#FlashNews : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் நியமனம்.. தப்பியோடிய கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு…

இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு தப்பியோடிவிட்டார்..

இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவில் தஞ்சம் புகுந்துள்ளார்..

ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகாமல் கோட்டபய மாலத்தீவு தப்பி சென்றதால் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலக் வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.. போராட்டக்காரர்கள் இலங்கை பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாக் கண்ணீர் புகைக்குண்டு வீசி ராணுவத்தினர் போராட்டத்தை கலைக்க முயன்றனர்..

பிரதமர் பொறுப்பில் இருந்து ரணில் விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.. போராட்டக்காரர்களை கலைக்க இலங்கை போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதற்கிடையில், கண்ணீர் புகை குண்டுகளால் தங்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க, போராட்டக்காரர்கள் சாலை தளபாடங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவசர நிலையை பிரகடனம் செய்தார்.. மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்க கூடாது என்பதற்காக இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த 4 மாதங்களில் 2 முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது..

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளார்.. ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக கோட்டபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.. இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது..

Maha

Next Post

ஆபத்தான ஆசிட் பூச்சியால் வேகமாக பரவும் தோல் தொற்றுநோய்.. என்னென்ன அறிகுறிகள்..?

Wed Jul 13 , 2022
சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் ஈ அல்லது நைரோபி ஈ என்ற பூச்சியால் ஏற்படும் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.. இதே போல் மேற்குவங்க […]

You May Like