fbpx

ரயில் பயணத்தில் 3 முறை பாலியல் பலாத்காரம்..!! அரைகுறை ஆடையுடன் தப்பியோடிய பெண்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

ரயிலில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள பகாரியா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, பாத்ரூம் செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தான் வந்த ரயிலில் இருந்து இறங்கி எதிரே நின்ற மற்றொரு ஏசி ரயிலில் ஏறியுள்ளார். இதைக் கவனித்த கமலேஷ் குஷ்வாகா என்ற 22 வயது இளைஞர், அந்த பெண்ணுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஏசி பெட்டியில் பெண் பயணி ஏறியதும் பின்னாலேயே ரயிலில் சென்றுள்ளார்.

அப்போது திடீரென பெண்ணை பலமாக இடித்து தள்ளியிருக்கிறார். இதில் நிலை தடுமாறிய அந்த பெண் கீழே விழுந்துள்ளார். தலையில் அடியும் பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் நின்று கொண்டிருந்த ஏசி ரயிலும் புறப்பட தொடங்கியது. இதைத் தொடர்ந்து ரயிலில் வைத்தே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் மறுப்பு தெரிவித்த போது கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

40 கி.மீட்டர் தொலைவுக்குள் 3 முறை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியுள்ளார். சாத்னா ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்துள்ளது. அப்போது தனக்கு தாகம் எடுப்பதாக பெண் கதறியுள்ளார். இதனால், ரயில் நிலைய பிளாட்பார்மில் கமலேஷ் இறங்கியதும் உஷரான பெண், ரயிலில் இருந்து அரைகுறை ஆடையுடன் ஓடியுள்ளார். நேராக ரயில் நிலைய காவலரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

உடனே உஷாரான ரயில்வே போலீசாரும் கமலேஷை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் ரயிலுக்குள் எறிய கமலேஷ், ஏசி கோச்சை பூட்டிவிட்டார். இதனால் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் ரயிலில் பயணம் செய்ய சில போலீசார் சாலை வழியாக கயிமா ரயில் நிலையத்திற்கு சென்றனர். ரயில் கயிமா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது குற்றவாளி பெட்டியை திறக்காமல் இருந்ததால், மெக்கானிக்கை வரவழைத்து கதவை திறந்த போலீசார், உள்ளே சென்று குற்றவாளியான கமலேஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Chella

Next Post

அதிர்ச்சி!... கொரோனா பாதித்தவரா நீங்கள்?… 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கும் வைரஸ்!

Wed Dec 13 , 2023
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நடத்திய ஆய்வு முடிவுகள் நேச்சர் இம்யூனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். எச்.ஐ.வி., வைரஸ்கள் இது போல நோய் […]

You May Like