fbpx

ஓடும் ரயிலில் பலாத்கார முயற்சி..!! இறுதிவரை போராடிய இளம்பெண்..!! கடுப்பில் தூக்கி வீசிய கும்பல்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பெட்டியில் 60 பயணிகள் வரை இருந்தனர். இந்நிலையில், குவாலியரை தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணையும் வந்த வாலிபரை அடித்து உதைத்தனர். 

பின்னர், தகராறு வேண்டாம் என்று கருதி அப்பெண்ணும் அந்த வாலிபரும் ரயிலின் வாசல் பக்கம் வந்து அமர்ந்தனர். அங்கு வந்தும் அந்த 5 பேரும் அப்பெண்ணை பாலியர் ரீதியாக துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்துள்ளார். ச்இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்தவர் யாரும் தட்டிக் கேட்கவில்லை. அரைகுறை ஆடைகளுடன் இருந்த பெண்ணிற்கு அவரது நண்பர் தனது கிழிந்த சட்டையை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார்.  

படுகாயமடைந்த இரண்டு பேரும் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர். ஆனால், வழியில் இருந்த கிராமத்தினர் அவர்களுக்கு உதவ மறுத்துவிட்டனர். பின்னர், மூதாட்டி ஒருவர் அவர்களுக்கு உதவியுள்ளார். அவர் தனது சேலை ஒன்றை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? - டிஜிபி தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

Fri Jun 23 , 2023
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. எப்படி தேர்வு செய்யப்படுகிறார் டிஜிபி? இந்நிலையில், டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காணலாம். ஒவ்வொரு மாநிலத்தில் […]

You May Like