உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மகளுக்காக அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். வழக்கு விவரம் குறித்து பேச வேண்டும் என கூறி அந்த பெண்ணை, காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா, அவரது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.
இதை நம்பிய, பாதிக்கப்பட்ட மகளின் தாயார் அந்த உயர் அதிகாரியின் வீட்டுக்கு சென்று இருக்கிறார். ஆனால், மகளுக்காக நீதி கேட்டு போன இடத்தில் அனூப் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பி ஓடிவந்துள்ளார்.

பின்னர், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இதன் அடிப்படையில் உயர் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அனூப் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனூப் மவுரியாவை காவல்துறையினர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.