fbpx

மைனர் பெண் பலாத்காரம்..!! போலீசிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜானி ஷேக் ஜானி பாஷா. சினிமாவில் எல்லோருக்கும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் என்பதால் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். இவர், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விஜய், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு தனித்துவமான டான்ஸ் அமைத்துக் கொடுத்து, இளம் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் நடனக் கலைஞர் ஒருவர் தனக்கு 16 வயது இருக்கும்போது, தன்னிடம் ஜானி மாஸ்டர் தவறாக நடந்துகொண்டதாக அவர் மீது புகாரளித்தார். அதில், சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்தபோது, ஜானி தன்னிடம் தவறாக நடந்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்து கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக தெலுங்கு சினிமாத்துறை, ஜானி மாஸ்டர் அங்கு பணியாற்ற தடை விதித்துள்ளது.

இந்நிலையில், அவரது மனைவி கூறுகையில், ’’ஜானி தான் பணியாற்றும் படங்களுக்கு எல்லாம் அப்பெண்ணுக்கு சான்ஸ் கொடுத்தார். அப்பெண் சினிமா அசோசியேசனில் சேரப் பணம் கட்டமுடியாமல் இருந்தபோது, அதை ஜானி தான் கொடுத்தார். அந்தப் பெண் மைனராக இருந்த போது, அவருடன் ஜானி தவறாக நடந்துகொண்டதற்கு ஆதாரம் இருக்கிறதா..? அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரைவிட்டு விலகவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இவ்விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், ஜானி மாஸ்டர், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சினிமா வட்டாரத்தில் அவரது ரசிகர்கள் தரப்பிலும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் விரைவில் அவருக்குத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Read More : திடீரென மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்..!! என்ன பிரச்சனை..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

English Summary

Johnny Master has reportedly confessed to police that he abused the girl.

Chella

Next Post

உங்கள் வாட்ஸ்அப்-ஐ வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?. கண்டறிவது எப்படி? எச்சரிக்கை அறிகுறிகள்!

Mon Sep 23 , 2024
How To Detect If Someone Else Is Accessing Your Whatsapp Account; Check Warning Signs

You May Like