fbpx

30 வருடங்களுக்கு ஒரு தரம்.! புது வருடத்தை ஆளப்போகும் 3 ராசிகள்.! வேத ஜோதிடம் கணிப்பு.!

ஒவ்வொரு புது வருடத்தின் தொடக்கமும் கிரகணங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது. இந்த மாற்றங்கள் சில ராசிகளுக்கு சாதகமாகவும் பல ராசிகளுக்கு பாதகமாகவும் அமைகின்றன. இவ்வாறு கிரகங்கள் தங்களது நிலையை மாற்றும் போது அவற்றின் சேர்க்கை பல ஆண்டுகளுக்குப் பின் நிகழக்கூடிய அரிய நிகழ்வாக அமைகிறது.

அதே போன்று வர இருக்கின்ற புதிய வருடத்தில் சனிபகவான் செவ்வாய் கிரகத்துடன் சேர இருக்கிறது. வேத ஜோதிடங்களின்படி இந்த நிகழ்வு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கை மிதுனம் துலாம் மற்றும் கும்ப ராசிகளுக்கு பல அதிர்ஷ்டங்களை கொட்டி கொடுக்கப் போகிறது. இந்த மூன்று ராசிகாரர்களுக்கும் நிகழ இருக்கும் அதிர்ஷ்டங்களை காணலாம்.

சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவை திறக்க இருக்கிறது. இவர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் இருப்பதோடு தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து விளங்கும். மேலும் வாழ்க்கையில் தீராத பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் எளிய வகையில் அமையும். ஏழரை சனியில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. சனி மற்றும் செவ்வாய் ராசிகளின் சேர்க்கையால் இவர்களது வாழ்வு முன்னேற்றம் அடையும். சமூகத்தில் இவர்களுக்கு என ஒரு கூட்டம் உருவாகும். வேலையிலும் பல உயர் பதவிகள் தேடி வரும்.

எடுத்த காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். இவர்கள் ஒரு வேலையில் இருக்கும் போது அந்த வேலை சரியாக அமையவில்லை என்றால் உடனடியாக புதிய வேலையை தேடவும். புதிய வேலையில்தான் அவர்களுக்கான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைந்து பயணிப்பது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம். இவர்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடியும். பல நாட்களாக தடைபட்டு வரும் காரியங்களும் கைகூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலையுடன் அதிர்ஷ்டமும் பண வரவும் சேர்ந்து கிடைக்கும்.

Next Post

சரும பிரச்சனையா.? கவலை வேண்டாம்.! இழந்த பொலிவை மீண்டும் பெற இது ஒன்னு போதும்.!

Sat Dec 23 , 2023
சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் விருப்பமான ஒன்று. இதற்காக பலர் பெரும் அளவில் பொருட்செலவும் செய்வார்கள். எனினும் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் சில பொருட்கள் சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் அப்படிப்பட்ட ஒரு பொருளை இந்த பதிவில் காணலாம். பாலில் இருந்து எடுக்கப்படும் சுத்தமான நெய் வைட்டமின்கள், நல்ல கொழுப்பு மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பெருமளவில் கொண்டிருக்கிறது. இவை நம் […]

You May Like