fbpx

அபூர்வ வளர்ச்சியடைந்த AI!… சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் என்ன?… அறிந்துகொள்வோமா?

நவீன மையமாக மாறிவரும் உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் ஒன்றுதான் தொழில்நுட்பம். அத்தகைய தொழில்நுட்பம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது வாழ்விலும் பல நன்மைகளை செய்வதோடு அதற்கு எதிர்மனையான பலவித தீய செயல்களை செய்வதற்கும் காரணமாகிறது.குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் தொழிநுட்பம் என்பது புரட்டிபோட்டுவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சமூகத்தில் தொழிநுட்பத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம்.

தொழில்நுட்பம் என்பது தற்பொழுது உள்ள காலகட்டத்தில் போக்குவரத்து, பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, இணையத்தின் வாயிலாக சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் தனிப்பட்ட நபரின் தகவல்களை திருடுவதோடு அதனை வைத்து மக்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியை நடைமுறையாக்கியுள்ளனர்.வளர்ந்து வரும் தொழிநுட்பமானது (i.e.செயற்கை நுண்ணறிவு (AI)) மாணவர்களின் கல்வி மற்றும் பல தொழில்நுட்ப துறைகளிலும் முன்னேற்றத்திற்க்கு பெருமளவில் உதவியாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை பார்த்து படித்து கற்றுக்கொள்வதைவிட இணையதளம் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் தகவல் பரிமாற்றம், வணிகம் மற்றும் தொழில் துறைகளில் பயனளித்துள்ளது. வாழ்க்கை முறைகளில் உடைகளைச் சுத்தம் செய்யவும், உணவைத் தயாரிக்கவும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.என்னதான் தொழில்நுட்பம் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்துறைகளின் முன்னேற்றத்திற்கு உதவினாலும், மக்களை அதில் அடிமைப்படுத்திவிடுகிறது. இதனால், மனச்சோர்வு மற்றும் பிற மனநல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப பயன்பாடு மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தியையும் குறைக்க வழிவகுத்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தூக்கம் இன்மை, உடல் பருமன், மாணவர்களின் படிப்பில் கவனக்குறைவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே உள்ள தொடர்பு மற்றும் நெருக்கம் குறைந்ததோடு, சைபர்புல்லிங் போன்ற தேவையற்ற ஈடுபாடுகளை செய்வதற்கு வழிவகுத்துள்ளது.அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு அத்தியாவசியங்களை அணுகுவதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட வகை உதவி தேவைப்படும் நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஒருவரால் அணுக முடியாத வாய்ப்புகளைப் பெறவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற பல சாதனங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

Kokila

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... Head Constable பணிக்கு விண்ணப்பிக்கலாம்!... மிஸ் பண்ணிடாதீங்க!

Sat May 27 , 2023
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.காலிப்பணியிடங்கள் – 81 […]

You May Like