fbpx

கல்யாண வீட்டை கதிகலங்க வைத்த ரசகுல்லா..!! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! பெரும் பரபரப்பு..!!

ஆக்ரா அருகே திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாட்டால் ஏற்பட்ட அடிதடியில் 6 பேர் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக ஷம்சாபாத் காவல்துறையினர் கூறுகையில், ”கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிஜ்பன் குஷ்வாகா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாடாக உள்ளதாக ஒரு நபர் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் திருமண நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களிடையே பரவி, எதிர்பாராதவிதமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலில் பகவான் தேவி, யோகேஷ், மனோஜ், கைலாஷ், தர்மேந்திரா, பவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்” என்றனர்.

Chella

Next Post

கூட்டணியை அறிவித்தது திமுக தலைமை..!! தெலங்கானாவில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Tue Nov 21 , 2023
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் […]

You May Like