fbpx

“மில்க் ஷேக்கில் எலி பேஸ்ட்” கேடிஎம் பைக்கை வாங்கி தராத விரக்தியில் இளைஞரின் “அதிரவைக்கும் சம்பவம்”..

தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தட்டு வண்டி இழுக்கும் கூலித் தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார்(22). எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தனக்கு அதிநவீன கேடிஎம் ரக பைக் வேண்டுமென தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார், மேலும் அதற்கான கொட்டேஷனும் வாங்கியுள்ளார். அந்த அதிநவீன பைக்கின் விலை ரூ.1.5 லட்சத்துக்கு மேல் என்பதால், அவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாததால், காலதாமதம் செய்து வந்துள்ளார் அவரது தந்தை.

இதனால் விரக்தியடைந்த நந்தகுமார் டிசம்பர் 27-ம் தேதி கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க் ஷேக்-ல் கலந்து குடித்துள்ளார். மேலும் இதை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கபட்டிருந்த நந்தகுமார் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். தான் விரும்பிய விலையுயர்ந்த பைக்கை தனது ஏழை பெற்றோர் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kathir

Next Post

நோட்...! தெருநாய் தொல்லை இருக்கா உங்களுக்கு...? உடனே இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க....!

Fri Jan 6 , 2023
தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]

You May Like