fbpx

ரத்தன் டாடா உடல்நிலையில் பின்னடைவு..?? அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. அவருக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக அவர், மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர்.

ரத்தன் டாடா தொடர்பான தகவல் தீயாய் பரவிய நிலையில், தனது உடல்நலம் குறித்து குறிப்பிட்ட ரத்தன் டாடா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், “என்னுடைய உடல்நிலை தொடர்பாக சமீபத்தில் வதந்திகள் பரவி வருவதை அறிந்தேன். இவை அனைத்தும் உண்மையில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வயது மூப்பு மற்றும் அதுசார்ந்த சுகாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காகவே சென்றுள்ளேன்.

இதில், வருத்தப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல நேர்மறையான சிந்தனையுடன் தான் இருக்கிறேன். எனவே மீடியாவிற்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More : தூங்கிக் கொண்டிருந்த நண்பன்..!! தலையில் ஒரே போடு..!! துடிதுடித்து பலி..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

English Summary

News spread that popular businessman and former chairman of Tata Group Ratan Tata has been admitted to the hospital.

Chella

Next Post

குஜராத்தின் திருப்பம் முதல் இந்தியாவின் உலகளாவிய எழுச்சி வரை.. பிரதமர் நரேந்திர மோடியின் 23 ஆண்டு பயணம் ஒரு பார்வை..!!

Mon Oct 7 , 2024
In October 2001, Narendra Modi was sworn-in as the Gujarat CM for the first time. In the past 23 years, PM Narendra Modi's leadership has been a beacon of transformation, first revitalising Gujarat and then setting India on an unprecedented path of progress.

You May Like