fbpx

ரேஷன் அட்டைதாரர்களே..!! இதை கவனிச்சீங்களா..? நெருங்கும் பண்டிகை..!! செம அறிவிப்பை வெளியிட்ட அரசு..!!

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியால் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டை 1,038 டன்னாக மத்திய அரசு கடந்த ஆண்டு குறைத்திருந்தது. இதனால், ரேஷன்தாரர்களுக்கு கோதுமை வழங்க முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, “தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்” என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், மத்திய உணவுத் துறைத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசியிருந்தார்.

இதற்கிடையே, தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி சென்று, மத்திய உணவு துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனால், ரேஷன்தாரர்களுக்கு கோதுமை பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் துவங்கவுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பானது, குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இளம்பெண்களுடன் நிர்வாண வீடியோ கால்..!! ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்த இளைஞர்..!! கடைசியில் வைத்த ட்விஸ்ட்..!!

English Summary

While there has been some confusion about the shortage of wheat in Tamil Nadu ration shops, now there is a happy news.

Chella

Next Post

’உன் கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல’..!! ’போலீஸ்காரர் என்னை நல்லா'...!! கள்ள உறவால் சிக்கித் தவிக்கும் கணவன்..!!

Sat Sep 28 , 2024
He has filed a complaint to rescue his wife from the clutches of the constable who is keeping her in a fake relationship.

You May Like